சபரிமலையில் பக்திப் பாடல்கள் பாடி பக்தர்களை பரவசப்படுத்திய பிரசாந்த் வர்மா

சபரிமலையில் பக்திப் பாடல்கள் பாடி பக்தர்களை பரவசப்படுத்திய பிரசாந்த் வர்மா
சபரிமலையில் பக்திப் பாடல்கள் பாடி பக்தர்களை பரவசப்படுத்திய பிரசாந்த் வர்மா

சபரிமலை சன்னிதானத்தில் கேரளாவின் பிரபல பஜனை பாடகரான பிரசாந்த் வர்மாவின் பக்தி பாடல்களால் ஐயப்ப பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.

சபரிமலை சன்னிதானத்தில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தினந்தோறும் ஐயப்ப பக்தி இன்னிசை நிகழ்ச்சி அரங்கேறி வருகிறது. இந்நிலையில், கேரளாவின் பிரபல பஜனை பாடகர் பிரசாத் வர்மாவின் மானசஜபலஹரி நாமசங்கீர்த்தன பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஐயப்ப சுவாமி என்ற பஜனையுடன் துவங்கி பம்ப கணபதி, கணபதியே போன்ற விக்னேஷ்வரரின் கீர்த்தனைகள் பக்தர்களை நெகிழவைத்தன. மாளிகைப் புறம்தம்மா, ரஞ்சினி மனோரஞ்சினி, அம்மே நாராயணா ஆகிவற்றின் துதிகளால் பக்தர்கள் மகிழ்ந்தனர்.

கோழிக்கோட்டை பூர்வீகமாகக் கொண்ட பிரசாந்த் வர்மா, ஏழு வயதில் இசையைக் கற்கத் தொடங்கினார். இன்று கேரளாவில் பிரபலமான பதினேழு பஜனை குழுக்களின் முன்னணி பாடகராக திகழும் பிரசாத் வர்மா 14 பக்தி இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் ஆர்மோனியத்தில் புருஷோத்தமன், தபேலாவில் சுனில், தவிலில் அமித், டோலக்கில் ரதீஷ் ஆகியோர் பிரசாத் வர்மாவின் பஜனைக்கு உயிரூட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com