நிதிஷ் ஆட்சிக்கு எதிராக 'பாத் பீகார் கி' சூறாவளி பயணம் - பிரசாந்த் கிஷோர் அசூரவேகம்

நிதிஷ் ஆட்சிக்கு எதிராக 'பாத் பீகார் கி' சூறாவளி பயணம் - பிரசாந்த் கிஷோர் அசூரவேகம்
நிதிஷ் ஆட்சிக்கு எதிராக 'பாத் பீகார் கி' சூறாவளி பயணம் - பிரசாந்த் கிஷோர்  அசூரவேகம்

பீகார் மாநிலத்தின் நலனுக்காக பாடுபடப்போவதாக, தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ஜனவரி 29 அன்று ஜே.டி.யு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் முதன்முறையாக பாட்னா வந்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் நிதிஷ்குமாரை பகிரங்கமாக குறிவைத்து குற்றம்சாட்டினார். அவர் கூறும்போது, “நிதீஷுடன் கருத்தியல் வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் பீகாருக்கு ஒரு வலுவான தலைவர் தேவை” என்றார்.

மேலும் பிப்ரவரி 20 முதல் 'பாத் பீகார் கி' நிகழ்ச்சியைத் தொடங்குவதாகவும், அதன் மூலம் நிதிஷ் குமார் ஆட்சிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் பீகாரை முன்னோக்கி அழைத்துச் செல்ல நினைக்கும் அத்தனை இளைஞர்களையும் இணைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.

“நிதிஷ் என்னை ஒரு மகனாக பாவித்து வைத்திருந்தார். நானும் அவரை ஒரு தந்தையைப் போலவே கருதுகிறேன். கட்சியிலிருந்து விலக்குவது குறித்து நிதிஷ் எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கது. அவருடனான வேறுபாடுகள் கருத்தியல் ரீதியானவைதான்” என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.

மேலும், பீகார் பல வகைகளில் பின்தங்கியுள்ளதாக குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் எனவும் கூறினார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவரிடன் கேட்ட போது, பீகாரைத் தவிர வேறு எங்கும் செல்லப்போவதில்லை. நான் ஒவ்வொரு நாளும் தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் பீகாரில் நிகழ்ச்சியைத் தொடங்குவேன். அதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் பீகாரை முதல் 10 மாநிலங்களில் சேர்க்க விரும்புபவர்களை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். நிதிஷ் குமார் அதில் சேர விரும்பினால், அவரையும் வரவேற்போம்” என்றார்.

பீகாரின் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசும்போது, 10-15 ஆண்டுகளில் நீங்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளீர்கள். ஆனால் உங்கள் சம்பளம் 5000 ஆக இருந்தது. அது இன்று 20,000 ஆக அதிகரித்துள்ளது. தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரை 2005 ல் பீகார் 22 வது இடத்தில் இருந்தது. இன்றும் அப்படியேதான் உள்ளது.

காந்தியின் கொள்கைகளை எப்போதும் விட்டுவிடமாட்டேன் என கூறிய நிதிஷ் குமார், கோட்சேவின் கொள்கையை உடையோரிடம் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும் எனக் கேள்வி எழுப்பினார். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் அண்மையில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com