\
‘பிரணாப் முகர்ஜி தேறி வருகிறார்’ - மகன் தகவல்

‘பிரணாப் முகர்ஜி தேறி வருகிறார்’ - மகன் தகவல்

‘பிரணாப் முகர்ஜி தேறி வருகிறார்’ - மகன் தகவல்
Published on

பிரணாப் முகர்ஜியின் உடல்நலம் தேறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். 

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்ற டெல்லி ராணுவ மருத்துவமமையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து கோமா நிலையிலேயே இருக்கும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை முன்னேற்றம், பின்னடைவு என மாறிமாறி நிலவிவருகிறது. இந்நிலையில் தனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி இன்று காலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘’உங்கள் அனைவரது வாழ்த்துக்களாலும், மருத்துவர்களின் முயற்சியிலும், என் தந்தையின் உடலுறுப்புகள் சீராக இயங்கி வருகிறது. அவரது முக்கிய அளவுருக்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ளன. அவரது உடல்நலம் தேறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தந்தையின் விரைவான மீட்புக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com