பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் - மகன் தகவல்

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் - மகன் தகவல்

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் - மகன் தகவல்
Published on
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். 
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்ற டெல்லி ராணுவ மருத்துவமமையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
 
தொடர்ந்து கோமா நிலையிலேயே இருக்கும் பிரணாப்பின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவமனை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் தனது தந்தை பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 
 
'நேற்று, தந்தையைக் காண மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். கடவுளின் ஆசீர்வாதத்துடன், உங்களின் நல்வாழ்த்துகளுடனும் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. சிகிச்சைக்கு அவரது உடல்நிலை ஒத்துழைத்து வருகிறது. விரைவில் அவர் குணமடைந்து திரும்பி வருவார் என்று நம்புகிறோம்'' என பதிவிட்டுள்ளார்.
 
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com