இந்தி தெரியாதவர் யாரும் பிரதமராக முடியாது: பிரணாப் முகர்ஜி

இந்தி தெரியாதவர் யாரும் பிரதமராக முடியாது: பிரணாப் முகர்ஜி

இந்தி தெரியாதவர் யாரும் பிரதமராக முடியாது: பிரணாப் முகர்ஜி
Published on

இந்தி தெரியாதவர் யாரும் பிரதமராக முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

சமீபத்தில் பிரணாப் முகர்ஜி ஒரு நூல் எழுதியிருந்தார். அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நான் அரசியல்வாதி இல்லை. பிரணாப் பிறவியிலேயே அரசியல்வாதி. என்னைவிட பிரதமராகும் தகுதி அவருக்குதான் உண்டு என பேசியிருந்தார். இந்நிலையில் ஒரு தொலைக்காட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி பேட்டி அளித்திருந்தார்.
அதில், கடந்த 1996- முதல் 2012 வரை காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் எனக்கு நீண்ட நாள் நண்பர். அவர்தான் பிரதமர் பதவிக்கு தகுதியான நபர். எனக்கு இந்தி தெரியாது. இந்தி தெரியாமல் இந்தியாவில் யாரும் பிரதமர் ஆக முடியாது. இந்தி தெரியவில்லை என்றால் பிரதமர் பதவி இல்லை என்று மறைந்த காமராஜர் கூறியுள்ளார். மன்மோகன் சிங் மீது சோனியா காந்தி நம்பிக்கை வைத்து இருந்தார். அவர்தான் அந்த பதவிக்கு சரியான தேர்வு என நானும் நன்கு உணர்ந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com