எப்படி இருக்கிறார் பிரணாப் முகர்ஜி?: மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

எப்படி இருக்கிறார் பிரணாப் முகர்ஜி?: மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

எப்படி இருக்கிறார் பிரணாப் முகர்ஜி?: மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்!
Published on

பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (84) உடல்நலக்குறைவால் ஆகஸ்ட் 10ஆம் தேதி, டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மூளையில் இருந்த ரத்தக்கட்டி ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என்று வந்த நிலையில் நுரையீரல் தொற்றுநோயும் உருவாகி, இப்போது அதற்காக சிகிச்சைபெற்று வருகிறார்.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமாவில் இருப்பதாகவும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது நுரையீரல் தொற்றுநோயையும் மருத்துவக்குழு உன்னிப்பாக கவனித்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென பலரும் தொடர்ந்து தங்களது விருப்பத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com