பிரக்ஞானந்தா தோல்வி! இருப்பினும் பலம் வாய்ந்த ஸ்பெயினை வீழ்த்தியது இந்திய ஓபன் பி அணி!

பிரக்ஞானந்தா தோல்வி! இருப்பினும் பலம் வாய்ந்த ஸ்பெயினை வீழ்த்தியது இந்திய ஓபன் பி அணி!
பிரக்ஞானந்தா தோல்வி! இருப்பினும் பலம் வாய்ந்த ஸ்பெயினை வீழ்த்தியது இந்திய ஓபன் பி அணி!

செஸ் ஒலிம்பியாட் தொடரின் இன்றைய போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்த போதிலும், மேலும் 2 தமிழக வீரர்கள் வெற்றியால் பலம் வாய்ந்த ஸ்பெயினை வீழ்த்தியது இந்திய ஓபன் பி அணி!

நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற 4 போட்டியிலும் வென்று பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியாவின் ஓபன் பி அணி. 3 தமிழக வீரர்களை அங்கமாக கொண்ட இந்த அணி இன்று பலம் வாய்ந்த ஸ்பெயினை எதிர்த்து களம் கண்டது.

தமிழக வீரர் குகேஷ் ஷிரோவ் அலெக்ஸியை எதிர்த்து கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். 44வது நகர்த்தலில் ஷிரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார் அதிபன். மற்றொரு தமிழக வீரரான அதிபன் போனெல்லி எட்வர்டோவை எதிர்த்து வெள்ளை நிற காய்களுடன் களம் கண்டார். 45வது நகர்த்தலில் எட்வர்டோவை சாய்த்து வெற்றி பெற்றார்.

அணியின் மற்றொரு வீரரான சரின் நிகால், குய்ஜாரோ டேவிட்டை எதிர்த்து வெள்ளை நிற காய்களுடன் களம் கண்டார். 44வது நகர்த்தலில் இந்த ஆட்டம் டிரா ஆனதும், இந்திய அணி 2.5 புள்ளிகளைப் பெற்றிருந்தது. அணியின் வெற்றி உறுதியான நிலையில், தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார் பிரக்ஞானந்தா.

சாண்டோஸ் லதாசா ஜெய்மை எதிர்த்து கருப்பு நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடினார். நீண்ட நேர நீடித்த இந்த ஆட்டத்தில் 85வது நகர்த்தலில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் தோல்வியடைந்தார். இருப்பினும் வெற்றிக்கு தேவையான 2.5 புள்ளிகளை இந்திய ஓபன் பி அணி ஏற்கனவே பெற்று விட்டதால் அது வென்றதாக அறிவிக்கப்பட்டது.விளையாடிய 5 போட்டிகளையும் வென்று முதலிடத்தில் இந்த அணி நீடிக்கிறது.

அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷ், “5-0 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியில் உள்ள அனைவரையும் நீண்ட நாட்களாக தெரியும். எனவே எங்களுக்குள் ஒரு நல்ல உறவு உள்ளது. எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் எதிர் எதிரே விளையாடி வந்தாலும் போட்டி நேரங்களை தவிர மற்ற நேரங்களில் நல்ல நண்பர்களாக தான் பழகுகிறோம். எனவே எங்கள் அணியில் எந்த பிரச்சினை ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com