எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?: பிரதீப் கவுர் விளக்கம்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமென்று ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
இது குறித்து பதிவிட்டுள்ள பிரதீப் கவுர், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யவேண்டுமென்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கின்றனர். ஆரோக்யமான வாழ்க்கை முறையே எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சில எளிமையான விஷயங்களை கடைபிடித்தால் போதும், கொரோனா மட்டுமின்றி வேறு நோய் தாக்காமலும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
1. தினமும் 4-5 பழங்கள் மற்றும் காய்கறிகள், புரதம் நிறைந்த உணவு, முழு தானியங்கள் மற்றும் மிதமான அளவு பால் பொருட்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்
2.நடைப்பயிற்சி, யோகா, வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி இப்படி ஏதேனும் ஒன்றை செய்து உடலை ஆக்டீவாக வைத்திருக்க வேண்டும். வெளியிலும் உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் தனிமனித இடைவெளி அவசியம்
3.ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அடிக்கடி பரிசோதனை செய்துகொண்டு மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் நாமாகவே மருந்து உட்கொள்ளக்கூடாது.
4. விட்டமின் சி மற்றும் டி கிடைக்கும் உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். உணவுப்பொருட்களில் சரியாக கிடைக்கவில்லை எனத் தெரிந்தால் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸாகவும் எடுத்துக்கொள்ளலாம்
5. போதுமான தூக்கம் அவசியம் - அன்றாட மன அழுத்தத்தில் இருந்து உடல் மீண்டு புத்துணர்ச்சி பெற தூக்கம் மிகவும் அவசியம். நல்ல தூக்கம் நமக்கான ஆற்றலையும் அதிகரிக்கிறது
6. இதனை செய்ய நீங்கள் பலமுறை யோசித்திருக்கலாம். உங்கள் நுரையீரலை பாதுகாக்க இதுவே சரியான நேரம் - புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்