குடும்பச் சண்டையில் மாமியார் கையை கடித்து குதறிய மருமகள்

குடும்பச் சண்டையில் மாமியார் கையை கடித்து குதறிய மருமகள்

குடும்பச் சண்டையில் மாமியார் கையை கடித்து குதறிய மருமகள்
Published on

ஓய்வுபெற்ற பெண் காவல் துணை கண்காணிப்பாளரை அவரது ம‌‌ருமகளா‌ன காவல் ஆய்வாளர் கடித்து குதறிய சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

இந்தூரில் காவல் துணை கண்கா‌ணிப்பாளராக பணியாற்றி‌ ஓய்வு பெற்றவர் பிரபா சவுகான். இவர் ஸ்ரத்தா சிங் என்ற காவல் ஆய்வாளரை தனது மகனுக்கு மணமுடித்து ‌வைத்தார். பிரபா சவுகா‌னுக்கும், ஸ்ரத்தா சிங்கிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஸ்ரத்தா சிங், தன‌து கணவரு‌ட‌ன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்‌. 


இந்நிலையில் ஸ்ரத்தா சிங்‌ தனது உறவினர்களுடன் மாமியார் பிரபா ச‌வுகான் வீட்டுக்குள் புகுந்து அவரைத் தாக்கியுள்ளார். பிரபாவின் கையையும் மருமகள் கடித்துத் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக ஸ்ரத்தா சிங் மீது பிரபா சவுகான் காவல்நிலையத்தில் புகார் அளி்த்துள்ளார். 

மேலும் அவர் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தனது குடும்பத்தில் அனைவரும் காவல்துறையில் பணியாற்றுவதால் தான் ஸ்ரத்தா சிங்கை மருமளாக தேர்வு செய்தேன் என்று பிரபா சவுகான் தெரிவித்துள்ளார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com