மோடிக்கு பிரத்யேக குஜராத்தி விருந்தளித்த போர்ச்சுகல் பிரதமர்

மோடிக்கு பிரத்யேக குஜராத்தி விருந்தளித்த போர்ச்சுகல் பிரதமர்

மோடிக்கு பிரத்யேக குஜராத்தி விருந்தளித்த போர்ச்சுகல் பிரதமர்
Published on

அரசுமுறைப் பயணமாக போர்ச்சுகல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் அண்டோனியா கஸ்டோ பிரத்யேக குஜராத்தி விருந்தளித்தார். 

பிரதமர் மோடி மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் பகுதியாக போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் சென்றடைந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை குஜராத்தி மொழியில் வரவேற்ற கோஸ்டா, மோடிக்காக பிரத்யேக குஜராத் பாரம்பரியம் கொண்ட மதிய உணவு விருந்தினையும் அளித்தார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இருவரும் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.பிரதமர் மோடி பேசும் போது சமீபத்தில் போர்ச்சுகலில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com