வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச படம்... சிக்கலில் கோவா துணை முதல்வர்...!

வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச படம்... சிக்கலில் கோவா துணை முதல்வர்...!
வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச படம்... சிக்கலில் கோவா துணை முதல்வர்...!

கோவாவின் துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கரின் மொபைல் போனிலிருந்து ஆபாச வீடியோ ஒன்று நேற்று அதிகாலை 1.20 மணிக்கு ‘VILLAGES OF GOA’ என்ற வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள கோவா முன்னணி கட்சியின் மகிளா பிரிவினர் துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யும்படி வற்புறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது ஹேக்கர்களின் வேலை என சொல்லியுள்ளார் துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர்.

இது தொடர்பாக கோவா சைபர் பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார் அவர். 

“அந்த வீடியோ பகிரப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் நானும் உறுப்பினராக உள்ளேன். எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இதை விஷமிகள் சிலர் செய்துள்ளனர். அந்த வீடியோ பகிரப்பட்ட நேரத்தில் நான் எனது போனை பயன்படுத்தவே இல்லை. அப்போது நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன்.

பொது மக்கள் மத்தியில் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என அவர் அதில் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற  சந்த்ரகாந்த் காவ்லேக்கர் பா.ஜ.கவில் இணைந்த பத்து எம்.எல்.ஏக்களில் ஒருவர். அதற்கான வெகுமதியாக அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com