அரசு அதிகாரிகள் கூட்டத்தில் தவறுதலாக ஒளிபரப்பான ஆபாச வீடியோ

அரசு அதிகாரிகள் கூட்டத்தில் தவறுதலாக ஒளிபரப்பான ஆபாச வீடியோ

அரசு அதிகாரிகள் கூட்டத்தில் தவறுதலாக ஒளிபரப்பான ஆபாச வீடியோ
Published on

ஜெய்ப்பூரில் நடைபெற்ற அரசு அதிகாரிகள் கூட்டத்தின் நடுவில் தவறாக திரையில் ஆபாச பட வீடியோ க்ளிப் ஒன்று ஒளிபரப்பானது சங்கடத்தை உருவாக்கியது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிவில் துறையின் அரசு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அரசு செயலகத்தில் என்.ஐ.சி அறையில் செயலாளர் முக்தா சிங் தலைமையில் நடைபெற்றது. துறை சார் அதிகாரிகள், என்ஐசி பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். மாநிலத்தின் 33 மாவட்டங்களிலிருந்து மாவட்ட சபை அதிகாரிகள் கலந்துரையாடினர். பல திட்டங்களை மீளாய்வு செய்ய இந்த கூட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில் அந்தக்கூட்டத்தில் வீடியோ கான்ஃப்ரென்ஸ் போது இரண்டு நிமிட ஆபாச வீடியோ ஒன்று தவறுதலாக திரையில் வரத் தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் முகம் சுழித்தனர். உடனடியாக என்ஐசி இயக்குநரை அழைத்து இந்த விஷயத்தை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குற்றம் புரிந்த பணியாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சின்ஹா தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com