\
போன்சி ஊழல் வழக்கு - சம்பந்தப்பட்ட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

போன்சி ஊழல் வழக்கு - சம்பந்தப்பட்ட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

போன்சி ஊழல் வழக்கு - சம்பந்தப்பட்ட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைதானதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் போன்சி ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். 

பெங்களூருவில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் ஃப்ரீத். இவர் பொதுமக்களிடம் இரட்டிப்பு பணம் கொடுப்பதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 

இந்தப் புகாரில் ஃப்ரீத்தை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஃப்ரீத் மீது வழக்குப்பதிவு செய்து அவருக்கு சொந்தமான நிதி நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர். 

இதைத்தொடர்ந்து ஃப்ரீத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வழக்கில் இருந்து தன்னை காப்பாற்ற பாஜக முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி தன்னிடம் இருந்து 20 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி ஜனார்த்தன ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் ஜனராத்தன ரெட்டி தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. 

இதனிடையே நேற்று முன்தினம் திடீரென போலீசார் முன்பு ஜனார்த்தன ரெட்டி ஆஜரானார். அவரிடம் இரவு முழுக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இதனயைடுத்து நேற்று காலை ஜனார்த்தன ரெட்டியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரது நெருங்கிய உதவியாளர் அலிகான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஜனார்த்தன ரெட்டியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நவம்பர் 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில், ஜனார்த்தன ரெட்டிக்கும் ஃப்ரீத்க்கும் இடைத்தரகர்களாக செயல்பட்ட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com