வர்றாரு.. கொட்டு வாங்குறாரு.. ரிப்பீட்டு! பொன்முடி வழக்கில் ஆளுநரை சரமாரியாக சாடிய உச்சநீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துவைக்க மறுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பொன்முடி, ஆர்.என்.ரவி
பொன்முடி, ஆர்.என்.ரவிட்விட்டர்

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சராக பதவிவகித்த திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன்முடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சமும் அபராதம் விதித்தது. இதனால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார் பொன்முடி. மேலும் அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே தமக்கும் மனைவி விசாலாட்சிக்கும் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்திருந்தார்.

பொன்முடி
பொன்முடிட்விட்டர்

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டது. இதனால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக அறிவிக்கப்பட்டார். அவரது தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பும் வாபஸ் பெறப்பட்டது. அத்துடன் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமும் அனுப்பினார். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியோ, பொன்முடிக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளதே தவிர, ரத்து செய்யவில்லை என்கிற கருத்தை முன்வைத்தது.

இதையும் படிக்க: “வழக்கு விசாரிக்கும் போதே கொண்டுவந்தது ஏன்” - CAA-க்கு எதிராக 236 மனுக்கள் - சூடிபிடித்த விசாரணை!

பொன்முடி, ஆர்.என்.ரவி
பதவியேற்புக்கு காத்திருக்கும் பொன்முடி... டெல்லி புறப்பட்ட ஆளுநர் RN ரவி... காரணம் இதுதானா?!

பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைக்க மறுப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக கருதி இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. இவ்விசாரணைக்குப் பிறகு, ”ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பது சட்டவிரோதமானது என எவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் கூற முடியும். தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உச்ச நீதிமன்றத்துடன் விளையாடுகிறாரா? உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படுகிறாரா? பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்கும் விவகாரத்தில் நாளைக்குள் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்களே எங்கள் முடிவை அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் குறித்த கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.

இதையும் படிக்க: U19 WCஇல் மிரட்டிய 17 வயது Fast Bowler! தெ.ஆப்ரிக்க தங்கத்தை தட்டித்தூக்கிய மும்பை..யார் இந்த மபாகா?

பொன்முடி, ஆர்.என்.ரவி
மீண்டும் MLA ஆனார் பொன்முடி... நாளை அமைச்சராக பதவியேற்பு? கடைசி நேரத்தில் ஆளுநர் வைத்த ட்விஸ்ட்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com