\
pomegranate theft maharashtra formers set solar powered cctv
pomegranateGoogle Gemeni

கொள்ளை போகும் மாதுளைகள்.. ரக்கனுக்கு முடிவு.. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய விவசாயிகள்!

இத்தகைய நவீனப் பாதுகாப்பால் புனே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் சோலார் சிசிடிவி கேமராக்களின் விற்பனை கடந்த சில மாதங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.
Published on: 

மகாராஷ்டிராவில் அறுவடை காலத்தில், சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் உயர் ரக 'பக்வா' (Bhagwa) மாதுளையை மீட்கும் பொருட்டு, அப்பகுதி விவசாயிகள் நவீன செயல்முறைகளில் இறங்கியுள்ளனர். சூரிய சக்தியால் இயங்கும் மற்றும் இரவுப் பார்வை திறன் கொண்ட சிசிடிவி கேமராக்களை தங்களின் தோட்டங்களில் பொருத்தியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், புனே மற்றும் சோலாப்பூர், நாசிக் மற்றும் அஹில்யாநகர் போன்ற பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் மாதுளைப் பழங்களின் அறுவடைக் காலம் தொடங்கியது. இப்பகுதிகளில், சந்தையில் அதிக விலைக்குக் (கிலோ ரூ. 90 முதல் 100 வரை) விற்கும் உயர் ரக 'பக்வா' (Bhagwa) மாதுளை விவசாயம் செய்யப்படுகிறது. குங்குமப்பூ-சிவப்பு நிறத் தோலும், மாணிக்க சிவப்பு நிற சதைப்பகுதியும் கொண்ட இந்த ரக மாதுளைகளுக்குச் சந்தையில் அதிகளவில் வரவேற்பு உள்ளது. எனினும், விளைச்சலின்போது அவை நள்ளிரவில் டன் கணக்கில் திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மாதுளைப் பழங்கள்
மாதுளைப் பழங்கள்ANI

மேலும், இரவில் சிறுத்தைகளின் நடமாட்டமும் அதிகரித்ததால் பாதுகாப்பற்ற சூழல் உருவானது. இதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அதற்கான நவீன பாதுகாப்பு செயல்முறைகளில் களமிறங்கியுள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, அங்கு பாரம்பரிய முறையில் விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் சுழற்சி முறையில் காவலில் ஈடுபடுவது வழக்கம். அதற்கு 'ரக்கன்' (Rakhan) என்று பெயர். ஆனால் அவர்கள் இதைத் தவிர்த்து, தற்போது தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய முறைக்கு மாறியுள்ளனர். அதன்படி, விவசாயிகள் சூரிய சக்தியால் இயங்கும் (Solar-Powered) மற்றும் இரவுப் பார்வை (Night Vision) திறன் கொண்ட சிசிடிவி கேமராக்களை தங்களின் தோட்டங்களில் பொருத்தியுள்ளனர்.

இக்கேமராக்கள் விவசாயிகளின் மொபைல் போன்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. தோட்டங்களில் ஏதேனும் அசைவோ (Motion Sensing) அல்லது சந்தேகத்திற்கிடமான நிகழ்வோ நடந்தால், உடனடியாக விவசாயியின் மொபைல் போனுக்கு அலாரம் மூலம் எச்சரிக்கை செய்தி சென்றுவிடும். இத்தகைய நவீனப் பாதுகாப்பால் புனே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் சோலார் சிசிடிவி கேமராக்களின் விற்பனை கடந்த சில மாதங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com