மாசடைந்த நீரைப் பருகியதால் 2018ல் ஒவ்வொரு நாளும் 7 பேர் உயிரிழப்பு

மாசடைந்த நீரைப் பருகியதால் 2018ல் ஒவ்வொரு நாளும் 7 பேர் உயிரிழப்பு

மாசடைந்த நீரைப் பருகியதால் 2018ல் ஒவ்வொரு நாளும் 7 பேர் உயிரிழப்பு
Published on

மாசடைந்த நீரைப் பருகியதால் கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் 7 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கடுமையான தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சாலையெங்கும் மக்கள் குடங்களுடன் தண்ணீருக்காக அலைகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் அவ்வபோது போராட்டங்களும் நடைபெறுகிறது. 

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாகவே சுகாதாரமற்ற நீரை பருகியதால் ஆண்டுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மத்திய சுகாதாரப் புலனாய்வுப் பிரிவு ‌மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் சுகாதாரமற்ற குடிநீரை பருகியதால் காலரா, கடுமையான வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களால் 2 ஆயிரத்து 439 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 

சுகாதாரமற்ற நீரால் ஏற்படும் நோய்த்தொற்றுகளில் 2018ஆம் ஆண்டில் குறிப்பாக, காலராவால் 6 பேரும், கடுமையான வயிற்றுப்போக்கால் ஆயிரத்து 450 பேரும், டைபாய்டால் 399 பேரும் மஞ்சள் காமாலை நோயால் 584 பேரும் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், கடுமையான வயிற்றுப்போக்கால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள்தான் அதிகளவு உயிரிழந்திருக்கின்றனர். இதுதவிர, நாடு முழுவதும் இதுபோன்ற நோய்களால் ஒரு கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com