"ராணுவம் குறித்து தவறான கருத்து கூறும் அரசியல்வாதிகள் கொல்லப்படவேண்டும்" - அமைச்சர் அதிரடி பேச்சு

"ராணுவம் குறித்து தவறான கருத்து கூறும் அரசியல்வாதிகள் கொல்லப்படவேண்டும்" - அமைச்சர் அதிரடி பேச்சு

"ராணுவம் குறித்து தவறான கருத்து கூறும் அரசியல்வாதிகள் கொல்லப்படவேண்டும்" - அமைச்சர் அதிரடி பேச்சு
Published on

நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் குறித்து கருத்துகளை தெரிவிக்கும் அரசியல்வாதிகள் கொல்லப்பட வேண்டும் என ராஜஸ்தான் அமைச்சர் ராஜ்குமார் ரின்வா
கூறியுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் வசுந்தராவின் நம்பிக்கைக்குரிய அமைச்சராக கருதப்படுபவர் ராஜ்குமார் ரின்வா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ராணுவ
வீரர்கள் குறித்து கருத்து தெரிவிப்பது ஒரு கலாச்சாரமாக உருவாகி வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். மேலும் பல அரசியல்வாதிகள்
ராணுவத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதாகவும், அவர்கள் அனைவரும் வெட்டிக்கொல்லப்பட வேண்டும் என்றும் ராஜ்குமார் தெரிவித்தார். இதற்கான சட்டமும் விரைவில் இயற்றப்பட வேண்டும் என்றும், இவ்வாறு பேசபவர்கள் வழக்குப்பதிவு செய்யும் அளவுநேரம் கூட உயிரோடு இருக்கக்கூடாது என்றும், ஐந்து நிமிடத்திற்குள் அவர்களை வெட்டி சாய்க்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏசி அறையில் அமர்ந்துக்கொண்டு கடும் வெயிலிலும், கடுங்குளிரிலும்
அவதிப்படும் ராணுவத்தினரை பற்றி பேச யாருக்கும் உரிமையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com