\
பிப்.27ம் தேதிக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் மாற்றம்

பிப்.27ம் தேதிக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் மாற்றம்

பிப்.27ம் தேதிக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் மாற்றம்
Published on: 

ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நான்கு நாள்களுக்கு முன்னரே இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடமும் இதேபோல சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தேதியில், போலியோ என்பது இந்தியாவிலிருந்து முழுவதுமாக ஒழிக்கப்பட்ட நோயாக இருப்பதற்கு, இந்த சொட்டு மருந்து விநியோகமே முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகவே இனிவரும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கட்டாயம் கொடுக்கப்படவேண்டும் என பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com