பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் பீகார் மாநிலத்தில் காவலர் ஒருவரே மதுபோதையில் ரகளை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தர்பாங்கா பகுதியில், நிகழ்ச்சி ஒன்றுக்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த காவலர் ஒருவர், மது போதையில் நடனமாடியதும், அங்கிருந்தவர்களிடம் பிரச்னையில் ஈடுபட்டதும் செல்போனில் பதிவு செய்யப்பட்டு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.