கைதியுடன் ‘டிக்டாக்’ வீடியோவில் ஆட்டம் போட்ட போலீஸ்
கேரளாவில் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதியுடன் காவல்துறையினர் எடுத்த ‘டிக்டாக்’ வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களை தவறான காரியங்களுக்காகவும் இன்றைய இளைஞர்கள் பயன்படுத்துவதாக ஒரு புகார் தொடர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காவல்துறையினரே, விசாரணை கைதியுடன் ‘டிக்டாக்’ வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவில் காவல்துறை வாகனத்தின் முன்பு நின்று கொண்டு, கைதியுடன் காவல்துறையினர் மலையாள பாடலுக்கு நடனமாடி வீடியோவை எடுத்துள்ளனர். அதேபோல நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் வாகனத்தின் உள்ளேயும் அமர்ந்து ‘டிக்டாக்’ வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.