இந்தியா
முதலமைச்சரின் நிகழ்ச்சியில் வீடியோகேம் விளையாடிய போலீஸார்
முதலமைச்சரின் நிகழ்ச்சியில் வீடியோகேம் விளையாடிய போலீஸார்
பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், காவல்துறையினர் சிலர் தங்களது செல்போனில் வீடியோ கேம் விளையாடிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பீகார் மாநிலம் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அதிகாரிகள் நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த போது அங்கிருந்த சில போலீசார் தங்களது செல்போனில் வீடியோ கேம்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். மேலும் சிலர் இணையதளத்தில் செய்தி படித்து கொண்டிருந்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.