வழி தெரியாமல் தவித்த குழந்தைகள்.. தெலங்கானா போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!

வழி தெரியாமல் தவித்த குழந்தைகள்.. தெலங்கானா போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!
வழி தெரியாமல் தவித்த குழந்தைகள்.. தெலங்கானா போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!

விளையாடச் சென்றுவிட்டு வீட்டுக்கு போக முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளை பத்திரமாக அவர்களது பெற்றோரிடம் சேர்த்திருக்கிறார்கள் தெலங்கானா மாநில போலீசார்.

உறவினர்களான மூன்று வயது மதிக்கத்தக்க 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை ஆகிய மூவரும் வீட்டை விட்டு வெளியே வந்து ஹபீப் நகர் பகுதியில் விளையாடியிருக்கிறார்கள். அப்போது ஹபீப் நகர் பகுதியைச் சுற்றியிருந்த பல தெருக்களுக்குச் சென்று விளையாடியதில் வீட்டும் செல்லும் வழியை அந்த மூவரும் தவற விட்டிருக்கிறார்கள்.

அப்போது ஹிந்திநகர் வழியே ரோந்து வாகனத்தில் வந்த போலீசார், வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் கண்டு அப்பகுதி மக்களிடம் முதலில் விசாரித்திருக்கிறார்கள். இதனையடுத்து குழந்தையை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதனையடுத்து அருகாமையில் இருந்த காவல் நிலையத்தில் காணாமல் போன குழந்தைகள் தொடர்பாக புகார் ஏதும் அளிக்கப்பட்டிருக்கிறதா என பேகம் பஜார் போலீசார் விசாரித்திருக்கிறார்கள். குழந்தைகளை போட்டோ எடுத்தும் அனுப்பி விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

இதனிடையே அந்த மூன்று சிறார்களும் பயத்தில் அழுததை அடுத்து அவர்களுக்கு பிஸ்கட்ஸ் கொடுத்தும் பெண் போலீசாரை பாதுகாப்பு கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். மூன்று மணிநேர விசாரணைக்கு பின்னர் குழந்தைகள் மூவரும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com