புதுச்சேரி: கழிவுநீர் வாய்க்காலில் விழுந்த மூதாட்டியை மீட்ட காவலர் - குவியும் பாராட்டு

புதுச்சேரி: கழிவுநீர் வாய்க்காலில் விழுந்த மூதாட்டியை மீட்ட காவலர் - குவியும் பாராட்டு

புதுச்சேரி: கழிவுநீர் வாய்க்காலில் விழுந்த மூதாட்டியை மீட்ட காவலர் - குவியும் பாராட்டு
Published on

புதுச்சேரியில் கழிவு நீர் வாய்க்காலில் விழுந்த மூதாட்டியை காப்பாற்றி அவரை தூக்கி சென்று வீட்டில் சேர்த்த போலீசாருக்கு பாராட்டுக்குள் குவிகின்றது.

புதுச்சேரியில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மூலக்குளம் குண்டுசாலை கழிவு நீர் வாய்க்காலில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தவறி விழுந்ததாக ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து, அந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜெயப்பிரகாஷ், சரவணக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மூதாட்டியை காப்பாற்றினர். அப்போது தான் அவரது பெயர் சுந்தரி (70) என்பதும் அவர் மேரி உழவர்கரை பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

அந்த மூதாட்டியை இரண்டு காவலர்களும் தூக்கிச்சென்று அவரது வீட்டில் சேர்த்தனர். மேலும் அவருக்கு உடைகளை மாற்றவும், அவருக்கு உணவும் வாங்கிக்கொடுத்துள்ளனர். மேலும் அவர்களது உறவினர் பற்றி விசாரித்து அவர்களுக்கு தகவல் கொடுத்து, மூதாட்டியை கவனிக்க வேண்டும் என்றும் காவலர்கள் அறிவுறுத்தினர். தொடர்ந்து. மூதாட்டியின் பேரர்கள் அவரை தற்போது கவனித்து வருகின்றது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி இரண்டு காவலர்களுக்கும் பாராட்டு குவிந்து வருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com