\
குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிக்கு கொரோனா

குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிக்கு கொரோனா

குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிக்கு கொரோனா
Published on

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியிலிருந்த உதவி ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியிலிருந்த உதவி ஆணையருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வசித்த கிழக்கு டெல்லி உள்ள கர்கார்டூமா பகுதியில் இருக்கும் அரசு குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவர் பணிபுரிந்த கட்டடம் குடியரசுத் தலைவர் தங்கியிருக்கும் கட்டடத்திற்கு வெளியே தான் இருக்கிறது. இருப்பினும் வெளியே வந்த அதிகாரிகளுடன் இவர் பேசியிருக்கலாம் எனப்படுகிறது. இதனால் அங்குக் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com