\
கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியைப் பறித்த காவலர்: தப்பியோடிய நக்சல்கள்

கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியைப் பறித்த காவலர்: தப்பியோடிய நக்சல்கள்

கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியைப் பறித்த காவலர்: தப்பியோடிய நக்சல்கள்
Published on: 

சத்தீஷ்கரில், தாக்குதல் நடத்திய நக்சல்களிடமிருந்து காவலர் துப்பாக்கியை பறித்ததால், நக்சல்கள் தப்பியோடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சத்தீஷ்கரில் உள்ள ஒரு கிராம மக்களிடம் தகவல்களைத் சேகரிப்பதற்காக பீமாராம் குஞ்சம் என்ற காவலர் சென்றார். அப்போது அங்கு வந்த ஐந்து நக்சல்கள், துப்பாக்கியால் பீமாராமை தாக்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில், நக்சல்களில் ஒருவர் வைத்திருந்த துப்பாக்கியை அந்தக் காவலர் பறித்தார். இதனால் செய்வதறியாது திகைத்த நக்சல்கள், உடனே அப்பகுதியிலிருந்து தப்பியோடிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவலர் பீமாராம் குஞ்சமின் துணிச்சலான செயலை சத்தீஷ்கர் காவல்துறை பாராட்டியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com