அலிகார் முஸ்லிம் பல்கலை. மாணவர்கள் 10 ஆயிரம் பேர் மீது வழக்கு

அலிகார் முஸ்லிம் பல்கலை. மாணவர்கள் 10 ஆயிரம் பேர் மீது வழக்கு
அலிகார் முஸ்லிம் பல்கலை. மாணவர்கள் 10 ஆயிரம் பேர் மீது வழக்கு

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட உத்தரபிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் பத்தாயிரம் பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக‌ தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களும் களமிறங்கினர். அவர்களுக்கு ஆதரவாக, டிசம்பர் 15 ஆம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டங்களில் குதித்தனர். அப்போது வன்முறை வெடித்தது. பல்கலைக்கழக நுழைவாயிலை போராட்டக்காரர்கள் சிதைத்ததாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர்.

இந்நிலையில், போராட்டங்களில் ஈடுபட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் 10 ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போராட்டத்தின்போது வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில், அடையாளம் தெரியாத 10 ஆயிரம் மாணவர்கள் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com