டெல்லியில் போலீஸ் நடத்திய என்கவுன்டரில் 4 பேர் கொலை

டெல்லியில் போலீஸ் நடத்திய என்கவுன்டரில் 4 பேர் கொலை

டெல்லியில் போலீஸ் நடத்திய என்கவுன்டரில் 4 பேர் கொலை
Published on

டெல்லியில் காவல்துறையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

டெல்லியில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் சிலர், தெற்கு டெல்லியின் சத்தார்பூரில் காரில் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, சிறப்புக்குழு காவல்துறையினர் காரை தடுத்து நிறுத்தினர். அப்போது, காவல்துறையினர் மீது காரில் இருந்தவர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில், காவலர்கள் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், காரில் இருந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த மேலும் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுட்டுக் கொல்லப்பட்டுள்ளவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com