மாவோயிஸ்ட்டாக மாறிவிடுவேன் என மிரட்டல் விடுத்த போலீஸ் பணிநீக்கம்
மாவோயிஸ்ட்டாக மாறிவிடுவேன் என மிரட்டல் விடுத்த காவலர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் சிங். அங்குள்ள ஜன்ஜீர் சம்பா பகுதியில் டிராபிக் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி அவர் பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார். எனவே ஒழுங்கின்மை காரணமாக பணிக்கு வராமல் இருந்த புஷ்பராஜ் சிங்கிடம் அதுகுறித்து விளக்கம் கேட்டு போலீஸ் உயர் அதிகாரிகள் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
ஆனால் உயரதிகாரிகளின் நோட்டீஸை ஏற்க மறுத்த புஷ்பராஜ் சிங், காவல்துறையின் உயர் அதிகாரிகளையே மிரட்டியிருக்கிறார். இதுதொடர்பாக ஆடியோ ஒன்றை வெளியிட்ட அவர், மாவேயிஸ்ட் அமைப்பிடம் தன்னை இணைத்துக் கொள்வேன் இல்லையென்றால் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஸ்ஐ அமைப்பிடம் தன்னை இணைத்துக்கொள்வேன் எனவும் கூறியிருக்கிறார். எனவே காவல்துறைக்கான விதிமுறைகளை மீறி செயல்பட்ட காரணத்தினால் புஷ்பராஜ் சிங் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக உத்தரவை எஸ்.பி நீத்து கமல் பிறப்பித்துள்ளார்.