பாக். சுதந்திர தின கொண்டாட்டத்தை ஸ்டேடஸ் வைத்த மும்பை மாணவர்கள்... கைது செய்து எச்சரித்த காவல்துறை!

மும்பையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர், ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானில் கொண்டாடப்பட்ட சுதந்திரதின கொண்டாட்டப் பதிவினை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து அதை தங்களின் வளைதளத்தில் ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளனர். அதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்
Arrest
ArrestFreepik

பாகிஸ்தானின் சுதந்திர தின கொண்டாட்டத்தை தங்களின் சமூக வளைதளங்களில் பதிவேற்றம் செய்ததற்காக மும்பையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முந்தைய நாள், அதாவது ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் சுதந்திரமடைந்தது. அடுத்தடுத்து இரு நாடுகளும் தங்களின் சுதந்திர தினத்தை கொண்டாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.

India Pakistan border
India Pakistan border

சமீபகாலமாகவே இளைஞர்கள் தாங்கள் பிரபலமடைவதற்காகவும், கவன ஈர்ப்புக்காகவும் விளையாட்டுத்தனமாக வித்தியாசமான படங்களை அல்லது பதிவுகளை தங்களின் சமூகவளைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

அப்படி மும்பையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர், ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானில் கொண்டாடப்பட்ட சுதந்திரதின கொண்டாட்டப் பதிவினை தங்களின் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளனர். இதை கவனித்த பிரத்மேஷ் சவான் என்ற தொழிலதிபர், மாணவர்களின் இத்தகைய செயல், வகுப்புவாத பதட்டத்திற்கு வழி வகுக்கும் என்று கூறி கடந்த திங்களன்று மும்பை கொலாபா காவல்துறையை அணுகி மாணவர்களின் மேல் புகார் கொடுத்துள்ளார்.

இவர் கொடுத்த புகாரின் பேரில் மாணவர்களின் மொபலை ஆராய்ந்த போலீசார், புகார் உண்மை என்று தெரியவந்ததும், முதலில் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துள்ளனர். பின் அவர்களின் இத்தகைய செயலை கண்டிக்கும் வகையில் சிஆர்பிசி 151வது பிரிவின் கீழ் போலீசார் மாணவர்களை கைது செய்துள்ளனர். பின், மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் மாணவர்களை எச்சரித்த போலீசார், பின்னர் அவர்களை விடுவித்துள்ளனர். இருப்பினும் மாணவர்கள் இன்னும் சில காலத்துக்கு சுதந்திரமாக வெளியிடங்களுக்கு செல்ல, செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com