பாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்

பாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்
பாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் -  அமைச்சர் ஜெய்சங்கர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் பகுதிதான் விரைவில் அது இந்தியாவின் கட்டுபாட்டிற்குள் வரும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் முறையிட்டது. அத்துடன் இந்த விவகாரத்தில் இந்திய மனித உரிமைகளை மீறுவதாக கடந்த வாரம் பாகிஸ்தான் ஐநாவின் மனித உரிமை ஆணையத்தில் குற்றஞ்சாட்டியது. இதற்கு காஷ்மீர் பிரச்னையை வைத்து பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களை ஆதரிக்கிறது என்று இந்தியா சார்பில் ஐநாவின் மனித உரிமை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் 100 நாட்களில் மத்திய வெளியுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்க அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் பகுதி தான். கூடிய விரைவில் அந்தப் பகுதி இந்தியாவின் கட்டுபாட்டிற்குள் வரும் என நான் நம்புகிறேன். 

மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதுகுறித்து இந்தியா பாகிஸ்தானிடம் ஆலோசிக்க தேவையில்லை. பாகிஸ்தானிடம் எல்லையில் பயங்கரவாத செயல்களை நிறுத்துவது தொடர்பாகவே இந்தியா ஆலோசிக்க வேண்டும் ” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com