“என்மீது பெரிய அளவில் POCSO தவறாக பயன்படுத்தப்படுகிறது!” - பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன்

ஜூன் 5-ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள பேரணி குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரிஜ் பூஷன் சிங் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
Brij Bhushan
Brij BhushanTwitter

ஜூன் 5-ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள பேரணி குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரிஜ் பூஷன் சிங், “அயோத்தி பேரணியில் 11 லட்சம் பங்கேற்பார்கள். என் விஷயத்தில், போக்சோ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சட்டத்தை மாற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்ANI twitter page

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் உட்பட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள், ஒரு மைனர் உட்பட ஏழு பெண் வீராங்கனைகள் ‘பிரிஜ் பூஷன் சிங் எங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்’ என குற்றம்சாட்டினர். மேலும் அவரை கைது செய்யக் கோரி, ஏப்ரல் 23 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது டெல்லி காவல்துறை.

இந்நிலையில், போக்சோ சட்டம் பெரிய அளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று சிங் குற்றம் சாட்டியுள்ளார். இச்சட்டத்தை மாற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம் என தெரிவித்த  பிரிஜ் பூஷன், இந்தச் சட்டத்தின் பல்வேறு அம்சங்களை ஆராயாமல் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com