\
நிரவ் மோடி சகோதரருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்

நிரவ் மோடி சகோதரருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்

நிரவ் மோடி சகோதரருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்
Published on: 

வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற நிரவ் மோடியின் சகோதரருக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் பெல்ஜியம் நாட்டின் குடியுரிமை பெற்றவர். இவர், வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல உதவியதாக கூறப்பட்டது. இதுதொடர்பான ஆதாரங்களைச் சேகரித்த அமலாக்கத்துறை நேஹலுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என இண்டர்போலிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 

நிரவ் மோடி வழக்கு தொடர்பான ஆதாரங்களை நேஹல் அழிக்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத்துறை இண்டர்போல் அமைப்பிடம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், தற்போது நேஹலுக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com