பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள்.. நடப்பாண்டில் மட்டும் இத்தனை கோடிகள் செலவா!!
நடப்பாண்டு, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு 67 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
இதுகுறித்து, மாநிலங்களவையில், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு 295 கோடி ரூபாய் செலவு ஆனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பிரான்சுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட நிலையில், அந்த பயணத்திற்கு 25 கோடியே, 59 லட்சம் ரூபாய் செலவானதாகவும், அதே மாதம் பிரதமர் மேற்கொண்ட அமெரிக்க பயணத்திற்கு 16 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்ட சவுதி அரேபிய பயணத்திற்கு 15 கோடியே 54 லட்சம் ரூபாயும், தாய்லாந்திற்கு 4 கோடியே 92 லட்சம் ரூபாயும், இலங்கை பயணத்திற்கு 4 கோடியே 46 லட்சம் ரூபாயும் செலவானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.