மோடியின் யோகா வீடியோ குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி யோகா செய்யும் வீடியோவை தயாரிக்க அரசு எந்த செலவும் செய்யவில்லை என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தான் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டார். மோடியின் வீடியோ அன்றைய தினம் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டானது. இந்த சூழலில், பிரதமர் யோகா செய்யும் வீடியோவை தயாரிக்க 35 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக, காங்கிரஸ் எம்பி சசி தரூர் குற்றம்சாட்டியிருந்தார்.
Read Also -> ஐக்கிய அரபின் ரூபாய் 700 கோடியை ஏற்க வாய்ப்பில்லை !
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திடம் தகவல் கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர் அலுவலக ஒளிப்பதிவாளரை கொண்டே அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும் இதற்கென தனிப்பட்ட முறையில் செலவு எதுவும் செய்யவில்லை என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.