ரூ1000க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு: கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் 1000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. சேமிப்பு, நடப்பு என எந்த வகையான கணக்கு வந்திருந்திருந்தாலும் இதே கட்டுப்பாடுதான். இந்த கட்டுப்பாடு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியில் இந்த அறிப்பை தொடர்ந்து நுற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு சென்று விசாரித்துள்ளனர். 1000 ரூபாய்க்கு மேல் எடுக்க கூடாது என்பதாக காரணங்களை அவர்கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். இதனால், இந்த வங்கி கிளைகளில் சற்றே குழப்பமான சூழல் நிலவியது.
தன்னுடைய அறிவிப்பில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்றும் வங்கிகளில் புதிய கடன்களை வழங்குவது, முன் பணம் கொடுப்பது, புதிய மூதலீடு உள்ளிட்டவற்றை தங்களுடைய அனுமதி இல்லாமல் செய்யக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்தக்கட்டுப்பாட்டிற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு 7 மாநிலங்களில் 134 கிளைகள் உள்ளன. மும்பை, நேவி மும்பை, தானே உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 81 கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் 51,601 வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த கூட்டுறவு வங்கியின் கிளைகள் தன்னுடைய வங்கிப் பணிகளை நேற்றுடன் நிறுத்தியுள்ளது. நேற்றில் இருந்து ஆறு மாதங்களுக்கு இந்த உத்தரவு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.