பாரதியின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி ட்வீட்

பாரதியின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி ட்வீட்
பாரதியின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி ட்வீட்
Published on

பாரதியார் பிறந்தநாள் தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். 

புரட்சிக் கவிஞர், முண்டாசு கவிஞர் என்று அழைக்கப்படும் மாகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் ட்விட்டரில் பலர் பாரதியாரின் வரிகளை பதிவிட்டு அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். அத்துடன் ட்விட்டரில் ‘பாரதியார்’ என்ற ஹேஸ்டேக் தமிழில் ட்ரெண்டாகி வருகிறது. 

இந்நிலையில் பிரதமர் மோடியும் பாரதியார் குறித்து தமிழில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின்  பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்.  அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன. 

சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில்  ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com