\
''பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்''- பிரதமர் மோடி

''பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்''- பிரதமர் மோடி

''பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்''- பிரதமர் மோடி
Published on

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல்துறை சிறப்பாக பணியாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த டிஜிபி மற்றும் ஐஜிக்களின் கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் மத்தியில் காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல்துறை சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

தெலங்கானா மற்றும் உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், காவல்துறைக்கு பிரதமர் மோடி இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார். கருத்தரங்கை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பத்திரிகையாளருமான அருண் ஷோரியை சந்தித்து மோடி நலம் விசாரித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com