\
யோகா பயிற்சியை தவிர்த்த பிரதமர் மோடி!

யோகா பயிற்சியை தவிர்த்த பிரதமர் மோடி!

யோகா பயிற்சியை தவிர்த்த பிரதமர் மோடி!
Published on

குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை தனது தாயார் ஹீராபென்னை சந்தித்தார். அவருடன் காலை உணவு விருந்தில் பிரதமர் பங்கேற்றார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், இன்று காலை தனது தாயார் ஹீராபென்னை சந்தித்ததாகவும், அந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தான் அன்றாடம் மேற்கொள்ளும் யோகா பயிற்சியை இன்று தவிர்த்து விட்டதாக பிரதமர் கூறியுள்ளார்.

முன்னதாக இந்தியாவின் முதல் சர்வதேச பங்குசந்தை வர்த்தக மையத்தின் துவக்க விழா நேற்று குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்தது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சர்வதேச பங்குச் சந்தை மையத்தினை துவக்கி வைத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com