
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடையும் நிலையில், மேலும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது, கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் நாட்டு மக்கள் கடைபிடிக்க வேண்டிய 7 குறிப்புகளை மோடி தெரிவித்தார்.