“ஐஐடிக்கு ஆயிரம் கோடி நிதியுதவி” - பிரதமர் மோடி

“ஐஐடிக்கு ஆயிரம் கோடி நிதியுதவி” - பிரதமர் மோடி

“ஐஐடிக்கு ஆயிரம் கோடி நிதியுதவி” - பிரதமர் மோடி
Published on

நாட்டைக் கட்டமைப்பதில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மும்பை ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, உலக அளவில் இந்திய பிராண்ட் பிரபலமடைய ஐஐடிக்கள் உதவியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப மனிதசக்தியாக இந்தியா உருவாக ஐஐடி கல்வி நிறுவனங்கள் பங்காற்றியதாக கூறிய பிரதமர், கண்டுபிடிப்பு மற்றும் செயல்படுத்துதல் ஆகியவை ஒரு நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதாகவும் கூறியுள்ளார். 

புதிதாக கண்டுபிடிக்கத் தவறினால் நாம் தேக்கமடைந்து விடுவோம் என்று கூறிய மோடி, புதிய யோசனைகள் கல்லூரி வளாகங்களில் இருந்தே வெளி வருவதாகவும் அரசு அலுவலகங்களில் இருந்தோ, கண்கவர் கட்டடங்களில் இருந்தோ அல்ல என்றும் தெரிவித்துள்ளார். மும்பை ஐஐடிக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் பிரதமர் உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com