இஸ்ரேல் பிரதமருக்கு காற்றாடி விட கற்றுக்கொடுத்த பிரதமர் மோடி!

இஸ்ரேல் பிரதமருக்கு காற்றாடி விட கற்றுக்கொடுத்த பிரதமர் மோடி!

இஸ்ரேல் பிரதமருக்கு காற்றாடி விட கற்றுக்கொடுத்த பிரதமர் மோடி!
Published on

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு இந்தியப் பிரதமர் மோடி காற்றாடி விடுவதற்கு கற்றுக்கொடுத்தார். 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது மனைவி மற்றும் வர்த்தகக் குழுவுடன் 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த பயணத்தின் போது இந்தியா-இஸ்ரேல் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதையடுத்து நேற்று ஆக்ரா சென்ற இஸ்ரேல் பிரதமர் தனது மனைவியுடன் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தார். 

இந்நிலையில் இன்று மனைவியுடன் குஜராத் சென்ற அவரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு இரண்டு பிரதமர்களும் சென்றனர். அங்கு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய நெதன்யாகு, காற்றாடி விட்டும் மகிழ்ந்தார். அப்போது காற்றாடி விடும் முறையும், நுணுக்கங்களையும் அவருக்கு பிரதமர் மோடி கற்றுக்கொடுத்தார்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com