\
'அடுத்த தேர்தலிலும் மோடி பிரதமராக வேண்டும்' - கங்கனா ரனாவத்

'அடுத்த தேர்தலிலும் மோடி பிரதமராக வேண்டும்' - கங்கனா ரனாவத்

'அடுத்த தேர்தலிலும் மோடி பிரதமராக வேண்டும்' - கங்கனா ரனாவத்
Published on: 

வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிபெற வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கங்கனா, ஜனநாயகத்தின் சிறந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்வதாக குறிப்பிட்டார். அதல பாதாளத்தில் உள்ள நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்ல 5 ஆண்டுகள் போதாது என கூறிய கங்கனா, 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று பிரதமர் பதவியில் மோடி நீடிக்க வேண்டும் என்றார். 

பெற்றோர் உதவியுடன் அல்லாமல், கடுமையாக உழைத்ததன் காரணமாகவே பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி வந்திருப்பதாகவும் நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். நேரம் வரும்போது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற அரசியலில் ஈடுபடுவேன் என கங்கனா அண்மையில் கூறியிருந்த நிலையில், தற்போது அவர் பிரதமர் மோடியை புகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com