உ.பி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் அபிநந்தன் பதக்

உ.பி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் அபிநந்தன் பதக்
உ.பி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் அபிநந்தன் பதக்

பார்ப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியை போலவே இருக்கும் அபிநந்தன் பதக், 2022 உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அந்த மாநிலத்தின் லக்னோ பகுதியில் உள்ள சரோஜினி நகர் சட்டப்பேரவை தொகுதியில் அவர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். 56 வயதான அவர் அங்குள்ள ஷரன்பூர் பகுதியை சேர்ந்தவர்.

“நான் பாஜக சார்பில் போட்டியிட விரும்பினேன். அது தொடர்பாக எனக்கு வாய்ப்பு வழங்குமாறு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தேன். எனக்கு பதில் கிடைக்கவில்லை. மோடியின் தீவிர பக்தன் நான். அதனால் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன். இதன் மூலம் நான் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத்தை முதல்வராக அரியாசனம் ஏற்ற உள்ளேன். ஒரு நாணயத்தில் உள்ள இரண்டு பக்க முகங்களாக மோடி மற்றும் யோகியை நான் பார்க்கிறேன். மக்களுக்காக தன்னலமின்றி உழைக்கும் அவர்கள் இருவரையும் நான் போற்றுகிறேன்” என;j தெரிவித்துள்ளார் அவர். 

மனைவியை பிரிந்து அபிநந்தன் பதக் வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com