பிரதமர் மோடிக்கு சியோ‌ல் அமைதி விருது

பிரதமர் மோடிக்கு சியோ‌ல் அமைதி விருது

பிரதமர் மோடிக்கு சியோ‌ல் அமைதி விருது
Published on

பிரதமர் மோடிக்கு தென் கொரியா அரசு சியோ‌ல் அமைதி விருது வழங்கி கவுரவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி பிரதமர் மோடிக்கு சியோ‌ல் அமைதி விருதை தென் கொரியா அறிவித்தது. விருது குறித்து விளக்கமளித்த தென் கொரியா, ஏழை- பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்ததற்காகவும் உலக அமைதிக்காகப் பங்காற்றியதற்காகவும் இந்தியப் பிரதமர் மோடிக்கு 2018-ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது அறிவிக்கப்படுவதாக தெரிவித்தது.

இந்நிலையில் இரண்டு நாட்கள் பயணமாக தென் கொரியா சென்ற பிரதமர் மோடி சியோலில் நடைபெற்ற விழாவில் விருதை பெற்றுக் கொண்டார். விருதைப் பெற்றுக்கொண்ட பின் பேசிய மோடி, இது எனக்கு மட்டுமானது மட்டுமல்ல. இந்திய மக்கள் அனைவருக்குமானது‌ எனத் தெரிவித்தார். 

1990ல் சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நினைவாக சியோல் அமைதி விருது கொடுக்கப்பட்டு வருகிறது. ஐ.நா. முன்னாள் செயலர் கோபி அன்னன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விருதை பெறும் முதல் இந்தியர் நரேந்திர மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

விழாவுக்கு முன்னதாக யோன்சி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை மோடி திறந்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com