\
திருப்பதியில் வேஷ்டியுடன் பிரதமர் மோடி

திருப்பதியில் வேஷ்டியுடன் பிரதமர் மோடி

திருப்பதியில் வேஷ்டியுடன் பிரதமர் மோடி
Published on

பிரதமர் நரேந்திர மோடி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபட்டார்.

அப்போது அவர் வழக்கமான ஆடைகள் அல்லாமல் பாரம்பரிய முறைப்படி வேஷ்டியும் மேல் துண்டும் அணிந்திருந்தார். வழிபாட்டிற்கு பின் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரதமருக்கு பாரம்பரிய முறைப்படி மரியாதைகள் செய்யப்பட்டன. முன்னதாக திருப்பதியில் இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமரின் வருகையை ஒட்டி திருமலை மற்றும் திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

104வது தேசிய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய மோடி, 2030ம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் 3 நாடுகளில் ‌ஒன்றாக இந்தியா திகழும் என்றார். இ‌தற்காக, புதிது புதிதாக அறிமுகமாகி வரும் தொழில் நுட்பங்களின் பலன்களை நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com