கேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

கேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

கேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
Published on

பிரதமர் நரேந்திர மோடி, கேதர்நாத் கோயிலில் இன்று வழிபாடு செய்தார். அவர் வருகையை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காலையில் கேதார்நாத் சென்ற பிரதமர், பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் வழிபட்டார்.

முன்னதாக அவர் வருவதை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து பிரதமர் மோடி கை அசைத்தார். நாளை, அவர் பத்ரிநாத் கோயிலுக்கு அவர் செல்கிறார். அங்கு சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார் என்று கூறப்படுகிறது. 


 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com