\
ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
Published on

ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

ஐதரபாத்தின் மியபூர் ரயில் நிலையத்தில் இதற்கான தொடக்க விழா இன்று மதியம் 2.25 மணிக்கு நடைபெற்றது. ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பின்னர் முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் மற்றும் அதிகாரிகளுடன் மியாபூரில் இருந்து குகட்பள்ளி வரை 5 கிலோமீட்டர் தூரம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இந்த ரயிலை பெண் ஊழியர் ஒருவர் இயக்கினார். 

பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்த போதும், நாளை முதல் தான் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. ரூ.15 ஆயிரம் கோடி செலவிலான இத்திட்டத்தில் 72 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 30 கிலோமீட்டர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மெட்ரோ ரயில் சேவை மூலம் இந்த ஆண்டில் நாளொன்றுக்கு 17 லட்சம் பேர் பயணிப்பார்கள் எனவும் 2024ல் 22 லட்சம் பேர் பயணிப்பார்கள் எனவும் ஐதரபாத் மெட்ரோ சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் கூட்டம் அதிகமுள்ள நேரங்களில் 3 அல்லது 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com