
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 32 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலில் இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய ரீதியான பிரச்னைகள் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
பிராந்திய பிரச்னைகளை பொறுத்தவரை, இந்தியாவுக்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையை தூண்டிவிடும் வகையில் பேசுவதாகவும், அது அமைதிக்கு உகந்ததல்ல என்றும் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி விளக்கினார். அதாவது காஷ்மீர் விவகாரம் குறித்து மோடி பேசியுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, உள்நாட்டு விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் பேசியிருந்தார் என்பது குறிப்பிடக்கத்தக்கது.