\
ஒரு கோடிப் பேரின் வேலை பறிபோகக் காரணமானவர் மோடி: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

ஒரு கோடிப் பேரின் வேலை பறிபோகக் காரணமானவர் மோடி: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

ஒரு கோடிப் பேரின் வேலை பறிபோகக் காரணமானவர் மோடி: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
Published on

ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறிய பிரதமர் அதற்கு மாறாக ஒரு கோடி பேரின் வேலை பறி போக காரணமாகியுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குச் செல்லும் அபாயத்தில் இருப்பதற்கு பிரதமர் மோடியே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையிலும், மிகப்பெரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் அபாயத்திலும் இருப்பதாக காங்கிரஸ் கட்சி அச்சம் தெரிவித்துள்ளது. மோடியின் பொறுப்பற்ற முடிவுகளே இந்த நிலைக்கு இந்தியா தள்ளப்பட காரணம். தற்போதைய பொருளாதார நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதுடன், சரிவை தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று அரசு தெரிவிக்க வேண்டும். ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறிய பிரதமர் அதற்கு மாறாக ஒரு கோடி பேரின் வேலை பறி போக காரணமாகியுள்ளார் என்று ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com