மோடிக்கு ‘ஸ்டேப் டவுன்’ சொன்ன அறிவிப்பாளர்

மோடிக்கு ‘ஸ்டேப் டவுன்’ சொன்ன அறிவிப்பாளர்

மோடிக்கு ‘ஸ்டேப் டவுன்’ சொன்ன அறிவிப்பாளர்
Published on

இந்திய பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகிய இருவரின் செய்தியாளர் சந்திப்பில், இரு பிரதமர்களையும் அறிவிப்பாளர் தவறாக பதவியிறங்க சொன்னது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த இந்தியா வந்துள்ளார். ஷேக் ஹசீனாவும் இந்திய பிரதமர் மோடியும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அறிவிப்பாளர் “ஸ்டேப் ஆஃப் தி ஸ்டேஷ்” என்று கூறுவதற்கு பதிலாக “ஸ்டேப் டவுன்” என்று தவறாக கூறினார். பதவி இறங்குங்கள் என்பதைத்தான் ஆங்கிலத்தில் “ஸ்டேப் டவுன்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் இப்படிச் சொன்னதும், அங்கிருந்த ஒருவர் “ஸ்டேப் டவுன்?” என ஆச்சரியமாக கேட்டவுடன், இரு நாட்டு பிரதமர்கள் உட்பட அனைவருமே சிரித்து விட்டனர்.

இரு நாட்டு பிரதமர்கள் இடையிலான இந்த சந்திப்பில் 22 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com